search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்நாள் தடை"

    ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மீது டெல்லி போலீசார் தொடுத்திருந்த சூதாட்ட வழக்கில் ஜூலைக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீசாந்த். இவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற சீசனில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதனை அடுத்து, ஸ்ரீசாந்த் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிசிசிஐ அவருக்கு கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடைவிதித்தது.


    இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து, டெல்லி ஐகோர்ட்டில் போலீஸ் தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கிடையே, ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் தங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

    மேலும், இதர நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட பிசிசிஐ தடையில்லா சான்று தர மறுப்பதாகவும், இதர நாடுகளில் சென்று விளையாட அனுமதி வேண்டியும் ஸ்ரீசாந்த் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வரும் ஜூலை மாதத்துக்குள் டெல்லி போலீசாரால் தொடரப்பட்ட கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #SCasksHC #Sreesanth
    ×